Mahasankara Matrimony







Message from our founder - P Swaminathan

01/10/2020
அன்புடையீர்,

நமஸ்காரம்.

Link to the video : https://youtu.be/NUvLbX3dcKo

மகா பெரியவா அருளால், திருமணம் நடக்க வேண்டிக் காத்திருக்கிற அனைத்துக் குடும்பங்களிலும் விரைவில் கெட்டிமேள சத்தம் ஒலிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

திருமணம் என்பது உரிய வயதில் நடக்க வேண்டிய ஒன்று என்பதை அனைவரும் உணர வேண்டும்.

எந்த ஒரு காலத்திலும் அவரவர்களுக்கு உரிய அனுஷ்டானங்களை/ வழிபாடுகளைக் கைவிட்டு விடக் கூடாது. உலக நலனை வலியுறுத்தியே பிராமணன் என்பவன் வாழ வேண்டும் என்று அற நூல்கள் வலியுறுத்துகின்றன. சமயச் சின்னங்களை (விபூதி, திருமண், குங்குமம் போன்றவை) அவரவர்கள் தரித்திருக்க வேண்டும். சந்தியாவந்தனம் போன்ற அனுஷ்டானங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், வளர்ந்து விட்ட சமூகம் என்று சில நினைத்துக் கொண்டு, இவற்றையெல்லாம் புறக்கணிப்பது வேதனையான செயல். சந்தியாவந்தனம் செய்வதையும், பட்டை பட்டையாக மேனியில் விபூதி இட்டுக் கொள்வதையும் இன்றைய நவநாகரிகத்துக்குக் குறைவாக சிலர் நினைக்கின்றனர் என்பது வேதனையான செயல். இயற்கை எத்தனையோ வகைகளில் மனிதர்களுக்குத் தண்டனை தந்தும், சிலர் மாற மறுக்கிறார்கள்.

நமக்கு நினைவு தெரிந்து இந்தப் பிறவி என்பது ஒன்றே ஒன்றுதான். மனிதனாகப் பிறந்திருக்கிறோம். மனிதனாகவே வாழ்வோமே!

பிள்ளைகளைப் பெற்றோரும், பெண்களைப் பெற்றோரும் ஓரளவுக்கு விட்டுக் கொடுத்து திருமண பந்தத்தைத் துவக்கி வைக்க வேண்டும். அறிவுரை சொல்ல வேண்டியவர்களே, ஆபத்தான பாதையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.

திருமணத்துக்கு உரிய வயதைத் தங்கள் மகனோ, மகளோ கடப்பதற்குள் எப்பாடு பட்டேனும் தாம்பத்ய ஸ்தானத்தை அவர்களுக்கு வழங்கி விட வேண்டும்.

எல்லோருக்கும் மீண்டும் என் நன்றிகள்... நமஸ்காரங்கள்.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்
நிறுவனர்/ தலைவர்
மகாசங்கரா மேட்ரிமோனி

- - - - - - - - - -

* திருமணத்துக்குக் காத்திருக்கும் உங்களது மகன்/ மகள் பற்றிய விவரங்களைக் காலதாமதம் இன்றி எங்களது வெப்சைட்டில் பதிவு செய்யுங்கள்.

பதிவு செய்ய வேண்டிய வெப்சைட் லிங்க்:

www.mahasankaramatrimony.com www.mahasankaramatri.com

* மகாசங்கரா மேட்ரிமோனி வழங்கும் அப்டேட் தகவல்களைத் தெரிந்து கொள்ள மகாசங்கரா மேட்ரிமோனி யூ டியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதுவரை செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டிய லிங்க் இதுதான்...

https://www.youtube.com/channel/UCCTuGPu94Obb5Y8O3n20qQw

சப்ஸ்கிரைப் செய்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த யூ டியூப் சேனலைப் பரிந்துரைக்கலாமே!