Mahasankara Matrimony







A marriage made in Mahasankara Matrimony!!

11/07/2020
ஒரு சந்தோஷமான செய்தி...

‘மகாசங்கரா மேட்ரிமோனி’ துவக்கப்பட்டு, மூன்று மாதங்கள் முடிவதற்குள் மூன்றாவதாக ஒரு திருமணமும் நிச்சயிக்கப்பட்டு விட்டது.

ஆம்!

மகாசங்கரா மேட்ரிமோனிக்குப் பெருமை சேர்த்த அந்தப் புண்ணியவதி மணமகளின் பெயர் - சுஷ்மிதா. எங்களது மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்து, மூன்று மாதங்களுக்குள் எங்கள் தளத்தில் இருந்தே சுஷ்மிதாவுக்குப் பொருத்தமான மணமகன் அமைந்து விட்டார். இரண்டு குடும்பத்தினரும் பேசி நிச்சயம் செய்து விட்டார்கள். வாழ்க மணமக்களும் அவர்களின் குடும்பமும்!

வரன்களைப் பதிவு செய்வதற்கு உண்டான இலவச காலத்துக்குள் (14.07.2020) இவர்களுக்குத் திருமணமே நிச்சயம் ஆகி உள்ளது. ஒரு பைசாகூட செலவில்லாமல் இவர்களுக்கு எல்லாமே சுபமாக அமைந்திருப்பது, பெரியவா அருளே!

நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா எங்களுக்குத் தருகிற அங்கீகாரமாகவே இதை நினைத்து, அடுத்தடுத்த திருமண நிச்சயங்களை நோக்கி நகர்கிறோம். உங்களுக்கு உதவவும் காத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் குழுவினர் இதற்காக வெப்சைட்டில் நல்ல பல மாற்றங்களை அவ்வப்போது மேற்கொண்டு, உங்களின் வசதிக்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பதிவு செய்வதும் எளிது; உரிய வரன்களைத் தேடுவதும் சுலபம்.

இந்தத் தளத்தில் பதிவு செய்திருப்பவர்கள் அதிக காலம் காத்திராமல், வெகு விரைவிலேயே அவர்களுக்கு திருமணப் பாக்கியத்தை காஞ்சி மகா பெரியவா தந்தருள வேண்டும் என்று இந்த வேளையில் பிரார்த்திக்கிறோம்.

குறுகிய காலத்தில் ‘மகாசங்கரா மேட்ரிமோனி’ என்கிற இந்தத் தளத்தை வெற்றித் தளமாக்கிய உங்கள் அனைவருக்கும் எங்களின் உளமார்ந்த நன்றிகள்.

மகா பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்
நிறுவனர்/ தலைவர்
மகாசங்கரா மேட்ரிமோனி
---------------------------------
* மணமகன்/ மணமகள் பதிவுக்கு:
www.mahasankaramatrimony.com www.mahasankaramatri.com

* மகாசங்கரா மேட்ரிமோனி வழங்கும் அப்டேட் தகவல்களைத் தெரிந்து கொள்ள மகாசங்கரா மேட்ரிமோனி யூ டியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதுவரை செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டிய லிங்க் இதுதான்...
https://www.youtube.com/channel/UCCTuGPu94Obb5Y8O3n20qQw

சப்ஸ்கிரைப் செய்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த யூ டியூப் சேனலைப் பரிந்துரைக்கலாமே!